Tuesday, 12 October 2010

அதிரைமணம் - கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள்

அன்பு அதிரைமணம் வாசக சகோதர, சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 30.05.2010 முதல் அதிரைமணம் இணையக்கடலில் மிதந்து நம் அதிரை  மக்களின் இதயத்தில் இடத்தை பிடித்துள்ளது என்பதை  பார்க்கும்  போது  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  பல  சகோதரர்களின்  கோரிக்கையை ஏற்று இன்று  முதல்  மீண்டும்  பின்னூட்டப் பகுதி தனியாக அதிரைமணம்1 என்ற  புதிய  வலைப்பூவில்  மூலம்  தொடங்கப்பட்டுள்ளது என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பதிவுடன் அதிரைமணத்தின்   முந்தைய  பின்னூட்டங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

அதிரைமணத்துக்கு ஆதரவு அளித்து, தொடர்ந்து வருகை தரும் அனைத்து  நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.  தொடர்ந்து   உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும்,விமர்சனங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: adiraimanam@gmail.com இணையத்தை பயன்படுத்தும் அனைத்து  அதிரைவாசிகளுக்கும் அதிரைமணத்தை  தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்.    

 
இன்ஷா அல்லாஹ் ஒற்றுமையுடன் ஒன்றிணைவோம் இணையத்தில்.

அன்புடன்

தாஜுதீன்

33 comments:

 1. சோதனை பின்னூட்டம் 1

  ReplyDelete
 2. இதன் நோக்கம் என்ன? பயன்படுகள் என்ன என்பதை 20 வரிக்கு மிகாமல் எழுதவும். 'தமிழெழுதி" இணைக்கவும்...டைப் செய்ய இன்னொரு இடத்துக்கு போவதற்க்கு தேவையில்லை [ ஆட்டோ எடுத்தா போவப்போறே என சபீர் கேட்கலாம்]

  Word Verification எதற்க்கு பிரான்ஸிஸ் சாரிடம் சாபம் வாங்கியவர்களை தயவு செய்து பழி வாங்க வேண்டாம்.

  ZAKIR HUSSAIN

  ReplyDelete
 3. அன்பு சகோதரர் ஜாஹிர், தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி.

  இது அதிரைமணம் தொடர்பான கருத்து பரிமாற்றம் செய்யப்படும் வலைப்பூ பகுதி மட்டுமே.

  அதிரைமணம் பற்றி கருத்துக்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் மற்றும் விமர்சனங்கள் இங்கு பதிவு செய்யலாம்.

  அதிரைமணத்தில் உள்ள வலைப்பூக்கள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

  அதிரைமணத்தை இன்னும் மிகத் தரமான திரட்டியாக உருவாக்க இந்த கருத்துப் பகுதி வலைப்பூ உதவும் என்பது எம் நம்பிக்கை.

  மன்னிக்கனும் சகோதரர் ஜாஹிர் 20 வரிகள் குறைவாக தான் எழுத முடிந்தது.

  உங்களின் ஆலோசனைப்படி தமிழெழுதி நிச்சயம் இணைக்கப்படும்.

  word verificaion நீக்கப்பட்டுள்ளது. பிரான்சிஸ் சாரின் சாபம் இனி பழிக்காது. :)

  ReplyDelete
 4. நல்லதையும் மற்றவைகளையும் மனம் பூசி ஒர் இடத்தில் சேர்த்தன் நோக்கமே ஆயிரம் கருத்துகள் நம்மிடையே இருந்தாலும் அதிரை என்று வந்துவிட்டால் ஓரிடத்தில் குவிந்தட வேண்டும் இதன் அடிப்படிக்கு முன்னுதாரனம் இந்த அதிரைமனம், மனக்கும், அனைவரின் மனதில் நிலைக்கும் இன்ஷா அல்லாஹ்...

  வலைப்பூக்களை பயிருடுபவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அறிமுகப் படுத்திவைத்திருப்பார்கள் அறிந்திருப்பார்கள் ஆனால் இங்கே மனம் வீச வந்துவிட்டால் யாவரின் கவனத்திற்குள்ளும் விளைச்சளின் மகசூல்தான்...

  ஜாஹிர் காக்காவின் ஆலோசனை தொடர வேண்டும்... நல்ல விமர்சனங்களை அங்கீகரிக்க வேண்டும்.

  ReplyDelete
 5. நாம் இடும் பின்னுட்டம் இட்ட பிறகு அதில் பிழை இருந்தால் முன்பு அளித்து விட முடிந்தது தற்போது அந்த வசதி இல்லை இட்டது இட்டதுதான் என்ற நிலை உள்ளது அதை முன்பு இருந்தது போல் செய்யவும்

  ReplyDelete
 6. அதிரைமணத்தில் உள்ள "தளங்களுக்குள்" ஒரு விளம்பரம் வந்து போகிறது. ஐ போன் இப்போது...முன்பு வேறு...பேஜ் லோடிங் ரொம்ப தாமதமாகிறது ...

  அதிராம்பட்டினத்தில் கேமரா ஒசி கேட்காத நிருபர் தேவை. ஊர் விசயங்கள் உடனே தெரிந்துகொள்ள முடியவில்லை.இந்த வேலையை ஒத்துக்கொள்ளும் நபர் குறைந்த பட்சம் வெளிநாட்டு விசா வந்தால் அதிரைமணத்தில் தெரிவித்து விட்டு போகும் பொறுப்பு இருக்க வேண்டும்.

  ஏதோ சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த மனுசன் தவராக விமானத்தில் கால் வைத்துவிட ..உடனே கதவை மூடி விமானம் டேக் ஆப் ஆயிடுச்சி..அதான் சொல்ல முடியலைனு சூடம் அணைத்து சத்தியம் செய்யும் "சத்தியவான்" யாரையும் அவசரப்பட்டு பொறுப்புகொடுத்து விட வேண்டாம்.

  முன்பு நண்பன் சரபுதீன் சொன்ன அந்த முன்னேற்ற விசயம் பற்றி இன்னும் ஏதாவது செய்வது பற்றி வேலையை ஆரம்பிக்கலாம்.

  இன்னும் நிறைய பேர் எழுத முயற்சிக்கலாம்.

  சமுதாயத்துக்கு தேவைப்படும் விசயங்களை கதை / கவிதையாக சொல்பவர்களை தேடிப்பிடித்து எழுத வைக்களாம். மற்ற வெப் களில் எழுதுபவர்களின் இமெயிலுக்கு அதிரை மணத்தை அறிமுகப்படுத்தலாம்.

  ReplyDelete
 7. ஜாஹிர் காக்காவின் அனைத்து நல்ல யோசனைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் முடிந்தவரை நடைமுறைக்கு சாத்தியப் படுத்த வேண்டும்.

  திடீரென்று எந்திருச்சு சொல்லிக் கொள்ளாமல் வரும் அந்த அனாமத்து விளம்பரம் சரி செய்வதில் டெக்னிகல் டீம் (டெக்னிக்களி ஸ்பீக்கிங்) கொஞ்சம் முழித்துப் பார்த்தா சரியாயிடும்.

  ஊரிலேயே புகைப்(படம்)போடும் ஆள்தான் இன்றைய நிலையில் தேடிப் பிடிக்க வேண்டும், செய்திகள் சூடாக இல்லாவிடினும் சுத்தமாக இருக்குமானால் நாமும் ஊர் நலனோடு ஆரோக்கியமாக இருக்கலாம்.

  ///ஏதோ சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த மனுசன் தவராக விமானத்தில் கால் வைத்துவிட ..உடனே கதவை மூடி விமானம் டேக் ஆப் ஆயிடுச்சி..அதான் சொல்ல முடியலைனு சூடம் அணைத்து சத்தியம் செய்யும் "சத்தியவான்" யாரையும் அவசரப்பட்டு பொறுப்புகொடுத்து விட வேண்டாம்.// வாய்விட்டு சத்தம்போட்டுச் சிரித்துட்டேன்.

  சர்ஃபுதீன் காக்கா முன் வைத்த முத்தான விஷயங்களை அங்கொன்றும் இங்கொன்றும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அதனை அலம்பளில்லாமல் அசத்தலாமென்று முன்னெச்சரிக்கையோடுதான் செயல் ஆக்கம் நகர்த்தப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.

  சாஹுல் காக்காவின் கூற்றுப்படி "கருத்துக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இல்லாமல் பள்ளிவாசலின் ஹவ்தில் போட்ட கல்லாக இருக்க"ச் செய்ய வேண்டும் அப்போதுதான் கையை விட்டு எடுக்க இலகுவாக இருக்கும்.

  ReplyDelete
 8. அல்லாஹ்வின் உதவியால் தொடர் முயற்சிகளின் முத்தாய்ப்பான ஆலோசனைகளின் பறிமாற்றம் வலுப்பெற்று வருவதை நாம் அவதானித்து வருகிறோம் இதன் பின்னால் வலுவூட்டும் அன்புச் சகோதரர்களுக்கு மன உறுதியையும் ஆரோக்கியத்தையும் அல்லாஹ் தந்தருள்வானாக.

  இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் கல்வி மேம்பாடு நற்செய்திகள் வெளிவரலாம் !

  ReplyDelete
 9. //நாம் இடும் பின்னுட்டம் இட்ட பிறகு அதில் பிழை இருந்தால் முன்பு அளித்து விட முடிந்தது தற்போது அந்த வசதி இல்லை இட்டது இட்டதுதான் என்ற நிலை உள்ளது அதை முன்பு இருந்தது போல் செய்யவும்//

  அன்பு சகோதரர் சாஹுல், தற்போது அதிரைமணம் கருத்துப்பகுதியில் தேதி மாற்றும் நேரத்துக்கு அருகில் சிறிய Box இருக்குதல்லவா, அதை கிளிக் செய்து தவறாக நீங்கள் உங்கள் முகவரியில் பதிந்த பின்னூட்டங்களை நீக்கிவிடலாம். சிரமம் இருந்தால் தெரிவிக்கவும், சரி செய்து விடுகிறோம்.

  ReplyDelete
 10. அதிரைமணத்திலிருந்து இனி தேவையில்லாத விளம்பர pop-up window வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சகோதரர் ஜாஹிர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  யார் யார் எந்த நாட்டிலிருந்து எத்தனை நபர்கள் நம் அதிரைமணம் பக்கம் வந்து போனார் என்று அறியும் புதிய widget விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

  ReplyDelete
 11. ஹஜ்ஜுடைய நேரம் ஆரம்பமாகிவிட்டதால், வழக்கம் போல் நம் அதிரைமணத்தில் மக்கா நேரலை மீண்டும் சேர்க்கப்படுள்ளது.

  இது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம்.

  ReplyDelete
 12. மக்கா நேரலை மிக தெளிவாக தெரிகின்றது.

  ReplyDelete
 13. இந்த தமிழெழுதியில் டைப் செய்யும் போது சில எழுத்துக்கள் கடைசியில் காணாமல் போய் விடுகிறது.அதை பார்க்க முடிவதில்லை. பிறகு காப்பி / பேஸ்ட் செய்யும்போது தெரிகிறது...

  ReplyDelete
 14. சகோதரர் ஜாஹிர் குறை உள்ளது உண்மைதான், இந்த தமிழெழுதி 1994-95ல் (சரி என்று நினைக்கிறேன்) மறைந்த அதிரை உமர் தம்பி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று உமர் தம்பி அவர்கள் இவ்வுளகில் இருந்திருந்தால் இந்த குறை என்றே நீக்கப்பட்டிருக்கும். இந்த தமிழெழுதி http://umar-tamil.blogspot.com/ யை bookmark செய்துவைத்துக்கொள்ளுங்கள், இன்னும் நிறைய எழுதலாம்.

  ReplyDelete
 15. //மக்கா நேரலை மிக தெளிவாக தெரிகின்றது.//

  நன்றி சாஹுல் காக்கா, மற்ற சகோதரர்களிடமிருந்தும் நல்ல பாராட்டு செய்திகள் வந்த வண்ணமுள்ளதோடு அல்லாமல், இந்த நேரலையை பார்க்கும் சகோதரர்களுக்கு ஹஜ் செய்யும் எண்ணம் ஏற்பட்டுள்ளதாக கேட்கும் போது உண்மையில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. அல்லாஹ் போதுமானவன்.

  ReplyDelete
 16. 'உமர் தமிழ்' என்றிருப்பதை, 'உமர்த்தமிழ்' என்று மாற்றி எழுதினால், உமருக்கே உரிய தமிழ் என்று அமைய வாய்ப்புண்டு! இனி, இப்படியே எழுதுங்கள்.

  ReplyDelete
 17. //'உமர்த்தமிழ்' என்று மாற்றி எழுதினால், உமருக்கே உரிய தமிழ் என்று அமைய வாய்ப்புண்டு! இனி, இப்படியே எழுதுங்கள். //

  அன்பு அதிரை அஹ்மது மாமா, "உமர்த்தமிழ்" என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இப்படியே எழுதுவோம்.

  ReplyDelete
 18. thajudeen...can you check adirai nirubar is not opening?

  ReplyDelete
 19. Br. Abdul Rahman & all adiraimanam visiters there is some updates going on, Kindly bare with us. Everything will be rectified in one or two days.

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அதிரைமணம் நற்மணமாக என்வாழ்த்துக்கள், அதிகமான சகோதரர்கள் விரும்பிப்படிப்பது வரலாறு, உண்மையான கதைகள், (நாவள்கள் படிப்பதுபோன்று) அதற்கு இரண்டுபக்கங்கள் இட்டு ஒன்று குர்ஆன் கூறும் வரலாறு மற்றொன்று நபி(ஸல்) அவர்கள் கூறும் வரலாறு, இதை எப்பவேண்டுமானாலும் எடுத்துப்படிப்பதற்கு இலகுவாக இருந்தால் நலவாகஇருக்கும், இந்தஇரண்டுப்பக்கத்தையும் ஆரம்பிக்கலாமே

  ReplyDelete
 21. அதிரைமணத்தில் பீஸ் டிவி, இஸ்லாம் டிவி, அல்ஜஜிரா டிவி, பிபிசி, சி என் என், என் டி டிவி, மக்கள் டிவி, போன்ற செய்தி சேனல்களை கொண்ட அதிரை டிவி வலைப்புவுக்கான இணைப்பு தலைப்புக்கு கீழ் வரும் drop down menuவில் தரப்பட்டுள்ளது.

  பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

  ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்களாம்.

  ReplyDelete
 22. please visit: www.samsulislamsangam.blogspot.com

  ReplyDelete
 23. Dear தாஜுதீன்
  Assalamuallikum,
  You are doing good service and I wish you have to do another one like Tamilmanam,tamilvali,valaipu like which can be utilized by all.
  I think you are the first in our community doing such kind of good service.
  With kind regards.

  ReplyDelete
 24. அன்பினிய எங்கள் மூத்த சகோதரர் நீடூர் அலி அவர்களுக்கு, தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.

  உங்களைப் போன்ற மூத்த சகோதரர்களின் ஊக்கமும் உற்சாகமும் நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பூ திரட்டியாக அதிரைமணம் நிச்சயம் இணையத்தள வடிவில் விரைவில் வெளிவரும். அதிரைமணத்திற்கான வரவேற்பு நமக்கு நல்ல உற்சாகத்தையும் ஆர்வத்தை தருகிறது, படி படியாக முன்னேறுவோம், இன்ஷா அல்லாஹ்.

  துஆ செய்யுங்கள்.

  ReplyDelete
 25. இந்த தளம் சிறந்த ஒன்று! ஏனெனில் இது ஒரு புரூட் அண்ட் வெஜிடபிள் மார்க்கெட்.!! அணைத்து பழசரக்கும், காய்கனிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும். அதிரை மனத்தைப் படிக்க அதிரைமக்கள் குடுத்து வைத்தவர்கள்!!

  www.adiraimujeeb.blogspot.com

  ReplyDelete
 26. assalam alaikum brother pls add my blog to ur list....my bloglink is http://adiraithunder.blogspot.com/
  thank u .........

  ReplyDelete
 27. //assalam alaikum brother pls add my blog to ur list....my bloglink is http://adiraithunder.blogspot.com/
  //

  வ அலைக்குமுஸ்ஸலாம்,

  அன்பு சகோதரரே தங்களைப் பற்றிய சுய விபரத்தை நம் அதிரைமணம் மடல் முகவரிக்கு adiraimanam@gmail.com அனுப்பிவையுங்கள், நிச்சயம் தங்களின் வலைப்பூ இணைக்கப்படும்.

  ReplyDelete
 28. plz add in ur site : www.ammintj.blogspot.com.
  thank U

  ReplyDelete
 29. // அதிரை இ த ஜ . said...
  plz add in ur site : www.ammintj.blogspot.com.
  thank U //

  அன்பு சகோதரரே தங்களைப் பற்றிய சுய விபரத்தை நம் அதிரைமணம் மடல் முகவரிக்கு adiraimanam@gmail.com அனுப்பிவையுங்கள், நிச்சயம் தங்களின் வலைப்பூ இணைக்கப்படும்.

  ReplyDelete
 30. Assalamu alaikum.
  We get all of Adirai blogs in one place.
  You have done a good job.

  Thank you,

  ReplyDelete
 31. http://manithaneyaexpress.blogspot.com/

  http://comparativestudy.blogspot.com/

  இணைக்கலாமே

  ReplyDelete
 32. அருமை இருப்பினும் அலெக்சா ரேங்க் பட்டியை நீக்கி வைக்கலாம் .

  ReplyDelete